தமிழகத்தின் அடிதட்டு மற்றும் நடுத்தர மக்களை சொத்துகாரரர் ஆக்கியவர் கலைஞர் கருணாநிதி!

karunanidhi-665x435

1960களில் நிலஉச்சவரம்பு சட்டம் காங்கிரஸ் ஆட்சியில் அமுல்படுத்தபட்டது.ஆனாலும் அச்சட்டம் வேகமாக நடைமுறைபடுத்தவில்லை.அதிகபட்ச உச்சவரம்பு 30 ஸ்டாண்டர்டு ஏக்கராக இருந்தது.அதனால் பெரிய அளவில் நிலகிழார்களிடம் இருந்து அரசு நிலத்தை கையகபடுத்தமுடியவில்லை.மடங்கள்,சர்க்கரை ஆலை,கல்லூரிகள், தேயிலை மற்றும் பழதோட்டங்களுக்கு உச்சவரம்பு சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டு இருந்தன.அந்த விலக்கை பயன்படுத்தி பல நிலகிழார்கள் கல்லூரிகள்,சர்க்கரை ஆலைகள்,பழதோட்டங்கள் தொடங்கி தங்கள் நிலங்களை காத்து கொண்டனர்.இப்போது போல் பினாமி சட்டம் அப்போது கடுமையாக இல்லாததால் பல சொத்துக்கள் பினாமி சொத்துக்கள் ஆகின..

ஆனால் கலைஞர் அவர்கள் 1972ஆம் ஆண்டு உச்சவரம்பை 15 ஸடாண்டர்டு ஏக்கருக்கு ஜமீன்கள்,நிலகிழார்கள் எதிர்ப்பை மீறி குறைத்தார்.வேகமாக இடையறாததாக உச்சவரம்பு சட்டத்தை செயல்படுத்தி சில இலட்சம் ஏக்கர் நிலங்களை கையகபடுத்தி இரண்டு ஏக்கர் ஒரு ஏக்கர் என நிலமற்றவர்கள் பலருக்கு பிரித்து கொடுத்துள்ளார்.இதேபோல் 1976 ல் அவர் அமுல்படுத்திய நகர நில(Urban Land Ceiling) உச்சவரம்பு சட்டதின் மூலம் நகரபகுதிகளில் பல ஏக்கர் நிலங்களை கையகபடுத்தி அரசு பயன்பயன்படுதிது.இன்னும் பல ஏக்கர் நிலங்கள் மக்கள் கைபற்றிலே இருந்தது.அதில் எல்லாம் அடுத்து வந்த ஆண்டுகளில் பல குடியிருப்புகள் வந்துவிட்டது.

அதில் இருந்தவர்கள் எல்லாம் இந்த இடங்களையெல்லாம் எப்பொழுதாவது அரசு கைப்பற்றிவிடும் என்று வயிற்றில் புளி கரைத்து கொண்டே வாழ்ந்தனர்.1989ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர் நகர நில உச்சவரம்புசட்ட வரன்முறைபடுத்துதல் சட்டத்தை கொண்டுவந்து மேற்படி நிலத்தில் வசிக்கின்ற மக்களுக்கு பட்டா அளித்து வீட்டுமனைகளுக்கு மக்களை உரிமையாளராக்கினார்.

அடுத்து 10வருஷம் 5வருஷம் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்கள் பலருக்கு பட்டா வழங்கிய பெருமை கலைஞருக்குதான் உண்டு..எனக்கு தெரிந்து சென்னை ஓ.எம்.ஆரில் மேட்டுகுப்பம்,காரப்பாக்கம்,சிறுசேரி போன்ற பகுதிகளில் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கி இன்று பலரை கோடீஸ்வரர்கள் ஆக்கிவிட்டார்..

பல காலமாக நீர்நிலை புறம்போக்கில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்க அதிக தடை இருக்கும் பட்சத்தில் மக்களின் நலனை கருதி பட்டா வழங்க உத்தரவு போட்டு அது நீதிமன்றத்தால் தடை செய்யபட்டு நிலுவையில் இருக்கிறது.
பெண்களுக்கு பூரவீக சொத்தில் வாரிசுரிமை என்ற சட்டத்தை 1989 இல் கொண்டுவந்து அவரை கொள்கை ரீதியாக எதிர்க்கின்ற ஆரிய பிராமணர்களின் பெண்கள் உட்டபட அனைத்து பெண்களையும் பூர்வீகசொத்தை அனுபவிக்க ஏற்பாடு செய்து இருக்கிறார்.

இவ்வாறு நில உச்சவரம்பு சட்டம்,நகர நில உச்சவரம்பு சட்டம்,புறம்போக்கு நிலத்தை பட்டா அளித்தல்,பெண்களுக்கு பூர்வீக சொத்தில் உரிமையளித்தல் போன்ற மக்களின் நலன் கருதிய கொள்கை முடிவுகளை எடுக்க நிச்சயம் ஆழமான அறிவு மக்கள் நலன் பற்றிய சிந்தனை இருக்க வேண்டும்.மேற்படி திட்டங்கள் மூலம் சாதாரண மக்களை இலட்சாதிபதிகளாக கோடிஸ்வரரகளாக மாற்றி இருக்கிறார் கலைஞர்.

மேற்படி நிலங்கள் பட்டாவாக மாறும்போது அப்பகுதிளில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்ந்து..அப்பகுதிகளில் நிலம் வாங்குதல் விற்பனை வேகமாக நடைபெற்றன.பல குடும்பத்தில் கல்யாணம் உயர்படிப்பு போன்ற நல்ல விஷயங்கள் நடந்தேறின.

எங்களை போன்ற ரியல் ஏஜெண்டுகள் ஜுவனமும் நன்றாக இருந்தது.
பின்குறிப்பு:நான் தி.மு.க அனுதாபியும் ஆதரவாளர் அல்ல.ம்ம்ம் மேற்கண்ட விஷயங்களை தி.மு.க காரர்கள் தான் செய்யனும்..இருந்தாலும் கலைஞரால் பயன் பெற்ற ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் என்ற விசுவாசத்தில் இந்த பதிவை இடுகிறேன்.
 
குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
நிறுவனர்-பிராப்தம் ரியல்டர்ஸ்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#நிலஉச்சவரம்பு #சட்டம் #காங்கிரஸ் #கலைஞர் #எஸ்டேட் #ஏஜெண்ட் #பட்டா #Urban #Land #Ceiling #நிலகிழார்கள் #kalaingar #estate #ajent #deed #act #law #asset #middle #people

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்