உங்கள் சொத்து ஜப்தியா? கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 18 செய்திகள்

Image result for உங்கள் சொத்து ஜப்தியா? கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 18 செய்திகள்


1. அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் பாக்கியோ அல்லது வரி பாக்கியோ ஒரு நில உரிமையாளர் வைத்து இருப்பார். அதனால் அக்கடன் தொகையை வசூலிக்க அவர் செலுத்தும் தொகைக்கு ஈடாக சொத்தை ஜப்தி செய்வார்கள்.

2. ரொம்ப காலம் இழுத்தடிப்பவர்களுக்கு தான் வேறு வழியே இல்லாமல் அரசு ஜப்தி செய்யும். நிச்சயம் கந்துவட்டி காரர் போல் அரசு நடந்து கொள்ளாது.

3. பல வாய்ப்புகளை அரசு நில உரிமையாளர்களுக்கு கொடுக்கும். அரசின் நோக்கம் சொத்தை பறிமுதல் செய்வதல்ல, நிலுவையில் இருக்கும் பணத்தை வசூலிப்பதே ஆகும்.

4. பாக்கி தொகை செலுத்துவதற்கு காலம் கொடுத்து தான் ஜப்தி ஆணை அரசு வழங்கும். வாய்ப்பே கொடுக்காமல் ஜப்தி ஆணை பிறப்பித்தால் ஆதாரத்தை காட்டி மாவட்ட ஆட்சியர் மூலம் அதனை ரத்து செய்யலாம்.

5. ஜப்தி செய்ய நோட்டிஸ் மற்றும் சொத்தின் மதிப்பை அறிவித்து ஏல நாளை குறித்து இருந்தாலும், அரசு இறுதி வாய்ப்பை தரும். ஏலத்திற்கு முன் நாள் பணத்தை கட்டிவிட்டால் ஏலத்தை நிறுத்தி விடுவார்கள். ஆனால் அதுவரை அரசு செய்த செலவுகளை கொடுக்க வேண்டும்.

6. ஜப்தி செய்ய அரசாங்கத்தில் அதிகாரம் பெற்றவர் தாசில்தார் ஆவார்.
7. ஜப்தி செய்த சொத்துக்களை விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு.

8. விவசாயிகளின், உழவு பொருட்கள், கால்நடைகள் விவசாய கருவிகளை ஜப்தி செய்ய விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

9. தாலி, திருமண மோதிரம், உடல், அணிகலன்கள் போன்றவற்றை ஜப்தி செய்வதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

10. சூரிய உதயத்திற்கு பின்பும், சூரியன் மறைவுக்கு முன்பும் ஜப்தி செய்யணும்னு சொல்றாங்க.

11. ஜப்தி செய்யப்படும் பொழுது கடன் பாக்கி வைத்து இருப்பவர்க்கு கட்டாயம் தகவல் முறையாக தெரிவிக்கப்பட்ட வேண்டும்.

12. ஜப்தி செய்த சொத்தை ஏலம் விட்டு, ஏலத் தொகையில் கட்டிய கடன் போக மீதம் இருந்தால், நில உரிமை யாருக்கு கொடுத்து விடுவர்.

13. யாருமே ஏலம் கேட்கவில்லை என்றால் அரசாங்கமே அந்த நிலத்தை குறிப்பிட்ட விலைக்கு எடுத்து கொள்ளும்.

14. ஜப்தி செய்யப்பட்ட சொத்தை தனிநபர் ஒருவர் ஏலம் எடுத்து முறையாக பட்டா மாற்றி சொத்தை அனுபவித்து கொள்ளலாம்.

15. அரசால் ஜப்தி செய்யப்பட்ட சொத்தை நிலத்தின் முன்னாள் உரிமையாளர் உரிமை கொண்டாட முடியாது.

16. அதனை மீறி ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்தால் அரசு குற்ற நடவடிக்கைக்கான தண்டனையை உடனே கொடுக்கும்.

17. ஏலத்தை எடுத்த தனிநபரிடம் அவர் விரும்பும் பட்சத்தில் கிரயம் பேசி வேண்டுமானால் சொத்தை மீட்கலாம்.

18. நீங்கள் வாங்கும் சொத்து ஜப்தி & ஏலம் மூலம் வந்து இருந்தால் அதிக கள விசாரணை மேற்கொண்டு அச்சொத்தை வாங்க வேண்டும்.


ஏலம் நோட்டீஸ்

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#ஜப்தி #வரி #ஏலம் #asset #land  #பட்டா #நோட்டிஸ் #ஆட்சியர்  #tax #deed #occuipied #auction

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்