வருவாய் துறை நில ஆவணங்களில் உள்ள குளறுபடி களால் பொது மக்கள் சந்திக்கும் 11 பிரச்சனைகள்!

b7f419ee7f7fc33e3a9eb0bcda032e09


1. 1985 களில் நடந்த நிலவரிதிட்ட சர்வேயின் போது பூர்வீக சொத்துக்களில் சில பங்காளிகள் பெயர் மட்டும் கணக்கில் ஏறி இருக்கும் மீதி பங்காளிகள் பெயர் ஏறி இருக்காது. பட்டா தன் பெயருக்கு வந்த பங்காளி , பட்டா கணக்கில பெயர் ஏறாத பங்காளிக்கு இடத்தை பிரித்து ஒப்படைக்காமல் வேறு நபருக்கு கிரயம் கொடுக்கும் பொழுது பல சண்டை, சச்சரவுகள், பெரியமனுசன்கள், நீதிமன்றம், காவல் நிலையை பஞ்சாயத்துக்களில் காலத்தையும், பணத்தையும் உறவுகளையும் இழந்து கொண்டு இருக்கின்றனர்.

2. நிலவரிதிட்ட சர்வே செய்யப்பட்ட கணக்கில் தனியார் ஒருவர் கிரயம் வாங்கி கிரைய பத்திரம் (பழையசர்வே எண் இருக்கிற)வைத்து இருக்கிறஅச்சொத்து புறம்போக்கு என தவறுதலாக வகைப்படுத்தப்பட்டால், பாதிக்கபட்டமக்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் ஆய்வாளர், கோட்டாட்சியர், தாசில்தார் நடையாய் நடக்கின்றனர்.

3. புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டது செல்லாது என வருவாய்துறையினரிம் நிருப்பிக்க ,கம்யூட்டர் E.C, மேனுவல் EC ,பழைய பத்திரங்கள் நகல் எடுத்தல், SLR நகல் எடுத்தல் தாலுகாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், ஆவண காப்பகங்களில், ஆவணங்களை தேடுவதற்கு, தங்களுடைய பணத்தையும் நேரத்தையும் இழக்கின்றனர்.

4. பாட்டன் பெயரில் இருக்கின்ற பட்டாவை பல ஆண்டுகளாக வாரிசுகள் பெயர் மாற்றாமலேயே இருந்து விட்டதால் இப்பொழுது மாற்ற வேண்டும் என்று பேரன்மார்கள் வட்டாசியர் அலுவலகம் சென்றால் தாத்தாவின் இறப்பு சான்று, வாரிசு சான்று, வாங்க வேண்டி இருக்கிறது. இறப்பு தேதியை தேட சுடுகாட்டு ஆவணம், தாலுகா, நகராட்சி, பத்திரபதிவு அலுவலகங்களில் தேடுகூலி கொடுத்து தேடியும் தேதி கிடைக்காவிட்டால் நீதிமன்றம் அணுகி பரிகாரம் பெற வேண்டும். நீதிமன்றம் சென்றால், வக்கீல் ஸ்ரைக், நீதிபதிகள் பற்றாகுறைன்னு நீதிதுறை வருவாய்துறை விட பிரச்சனைகள் நிறைந்ததாய் இருக்கிறது. இப்பொழுது இந்த மாதிரி வாரிசு சான்று, இறப்புசான்றுக்கு கோட்டாட்சியருக்கு நீதிமன்றத்தில் இருந்து திருப்பபடுகிறது.

5. இதனால் பட்டா பெயர் மாற்றமே செய்ய வேண்டாம் என்று விட்டு செல்கின்ற பேரன்மார்கள் அதிகம் இந்த வேலைகளுக்கு கோர்ட்டுக்கு முத்திரைத்தாள் கட்டணம்,முத்திரை வில்லை கட்டணம், வழக்கறிஞர் கட்டணம் என்று கையில் இருக்கும் சேமிப்பு பணத்தை எல்லாம் செலவழித்து மனநிம்மதியை பேரன்மார்கள் இழந்து விடுகிறார்கள்.

6. நிலவரிதிட்ட காலத்தில் செய்யப்பட்ட சர்வே ஆவணங்களில் இருக்கும் பட்டாதாரர்கள், தங்களுடைய பெயர் மாற்றம் செய்யமாலேயே இறந்துவிட்டார்கள். இப்பொழுது சொத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள், அவ்வாரிசுகளுக்கு பல வாரிசுகள் என சொத்துரிமை பல பங்குகளாய் ஆகிவிட்டது. ஆனால் யாருக்கும் பத்திரஙகள் இல்லை. செட்டில்மென்ட், தானம், விடுதலை பத்திரங்கள் மூலம் பத்திரம் உருவாக்கலாம் என்று நினைத்தாலும் ஒருவர் பங்கை இன்னொருவர் அடையலாம் என்று நினைத்தாலும், பத்திரப்பதிவு துறையின் வழிகாட்டி மதிப்பு அதிகமானது போன்ற குளறுபடிகளால் யார் செலவு செய்வது என்று செலவுக்கு பயந்து பட்டா பெயர்மாற்றம் செய்யும் வேலையை கிடப்பிலேயே போட்டுவிடுகின்றனர்.

7. விவசாய நிலங்களில் தற்போது பாடுபடுவரின் பெயர் பட்டாவில் மேற்கண்ட சிக்கல்களால் ஏறாமல் இருப்பதால் அவருக்கு கிடைக்க வேண்டிய விவசாய மானியங்கள், கடன்கள், நிதிஉதவிகள், காப்பீடு பெற முடியாமல் தவிர்க்கின்றனர் அலைகிழிக்கபடுகின்றனர்.

8. மகள் திருமணம், மகன் படிப்பு போன்ற நல்ல காரியங்களுக்கு சொத்தை விற்கலாம் என்று நினைத்தால் இவ்வளவு ஆவண குளறுபடிகள் சரி செய்தால் தான் கிரையம் என்றால் இதற்கு ஆகும் கால விரயத்தை நினைத்து சொத்தை விற்கவும் முடியாமல், மகன்,மகள் நெருக்கடிகளால் சொத்தை வைத்து இருக்கவும் முடியாமல் விழி பதுங்கி நிற்கின்றனர்.

9. நில அளவுகளில் துல்லியமின்மை, வேலி தகராறு, நில ஆக்கிரமிப்பு தகராறு,எல்லை பிரச்சினை, என்றால் அரசு சர்வேயர் வந்து இரண்டு தரப்புக்கும் வந்து அளந்து தர வேண்டும். சர்வேயரை பிரச்சனைக்குரிய ஸ்தலத்திற்கு வரவைப்பதற்கே, பல நடைகள், பல தொலைப்பேசி அழைப்புகள், அதன் பின் தொடர் ( FOLLOWUP) களுக்கு பின்பு வருகிறார்கள்.

அதனால் ஏற்படுகின்ற கால விரயம், அலைகழிப்புகள், வெறுத்து போக வைக்கும் மன நிலைக்கு மக்கள் வந்து விடுக்கின்றனர். பட்டாவில் இருப்பது பத்திரத்தில் இல்லை, பத்திரத்தில் இருப்பது FMBயில் இல்லை, இவை மூன்றிலுமே இருப்பது களத்தில் இல்லை! இப்படித்தான் சர்வேக்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.

10. UDR, கிராம நத்தம், நகர சர்வேக்களின் பட்டா பெயர் மாற்றம், செய்ய நினைக்கும் நடுத்தர மக்கள் தினமும் வேலைக்கு போவதால் இதற்கென்று ஒரு ஆளை சம்பளதிற்கோ அல்லது தரகிற்கோ உதவி கோர வேண்டி இருக்கிறது. VAO, RI DTபோன்ற அதிகாரிகளை.அதிக பின் தொடரல்களை செய்ய வேண்டி இருக்கிறது. அதிக காத்திருத்தல் செய்ய வேண்டி இருக்கிறது.
இதற்கும் மக்களின்கையிருப்பும், காலமும் வீணாக்கப்படுகிறது. ,


11 மேற்சொன்ன சிக்கல்களுகக்கு தீர்வு வேண்டி அரசு அதிகாரிகளிடம் சென்றால், காலதாமதம் , அலைகிழிப்பு , போன்றவற்றவோடு கையூட்டு இலஞ்சமும், , பேரமும் கொடுக்காமல் வேலைகள் முடிவதில்லை. சாதாரண மாத சம்பளர்கள்,விவசாயிகள், பெரும் பணம் இதில் இழக்கிறார்கள்.

சமீபத்தில் சென்னை – OMR துரைப்பாக்கத்தில் VAO விடம் பட்டா பெயர் மாற்றத்திற்கு கையூட்டு தொகையை கேள்விபட்டதுமே HEART ATTACK வந்து இறந்து போனார் அந்த மாத சம்பளக்காரர்.அந்த அளவுக்கு அனைவருமே வாங்கி வாங்கி பழகிவிட்டனர்.

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#revenue #department #சர்வே #land #document  #பட்டா #வேலி #தகராறு  #முத்திரை #செட்டில்மென்ட் #தானம் #விடுதலை #stamp #settlement #deed #release #fmb #udr #district

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்