சொத்தை யாரிடம் இருந்து வாங்குறீர்கள்? கொஞ்சம் கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

9618e5ea4f59bacb63bb855c5c717c61
1. உரிமையாளர் மனநிலை பாதிக்கப்பட்டால் ( பைத்தியம்) நீதிமன்ற அனுமதியுடன் கார்டியனிடம் கிரயம் வாங்க கையெழுத்து வாங்க வேண்டும்.

2. உரிமையாளர் மைனராக இருந்தாலும் நீதிமன்ற அனுமதியுடன் கார்டியனிடம் இருந்து கையெழுத்து வாங்க வேண்டும்.

3. உரிமையாளர் நொடிந்தவராக ( INSOLVENT) ஆக இருந்தால் அதிகார பூர்வ கோர்ட் சொத்து காப்பாளர் ( ASSIGNEE ) எழுதி கொடுக்க வேண்டும்.

4. சர்ச் நிலங்களுக்கு அறங்காவலர் குழு & பிசப் அனுமதி வேண்டும்.

5. இந்து கோயில் சொத்து என்றால் அறநிலை துறை அனுமதி வேண்டும்.

6. இஸ்லாமிய அறக்கட்டளை என்றால் வக்ஃப் வாரியம் அனுமதி வேண்டும்.

7. கூட்டு பங்கு நிறுவனத்தின் சொத்து என்றால் சொத்தை விற்க அனுமதி பெற்ற பார்ட்னர் (அ) அனைத்து பங்குதாரரும் இருப்பது நல்லது.

8. கம்பெனி சொத்து என்றால், கம்பெனி சட்டப்படி கம்பெனி நிர்வாக குழு தீர்மானம் சொத்தை விற்க அனுமதி வழங்கியுள்ளதா என்றும், கையெழுத்து போட வரும் நபருக்கு தீர்மானம் மூலம் அதிகாரம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

9. திவாலாகி விட்ட கம்பெனி சொத்துக்களை நீதிமன்றத்தின் அதிகார பூர்வ கலைப்பாளர் ( LIQUIDATOR ) க்கு மட்டுமே உரிமை இருக்கிறது.

10. கடனாளிகளின் சொத்தை விற்க வங்கியின் அதிகார பூர்வ ஏலத்துறையினர் விற்க அதிகாரம் உண்டு.

11. 12 வருடம் அனுபவம் காட்டி ( ADVERSE POSSESSION) விற்பவர் என்றால் விளம்புகை நீதிமன்ற ஆணையை விற்பவர் வாங்கி இருக்க வேண்டும்.

12. நாட்டை விட்டு வெளியேறியவர் சொத்தானால் அல்லது குடிபெயர்ந்தவர் சொத்து என அறிவிக்கப்பட்டு இருந்தால் சொத்துக்கு அரசு பாதுகாப்பாளர் ( CUSTODIAN ) மட்டுமே விற்க உரிமை பெற்றவர்.

13. வாரிசு இல்லாமல் அரசால் கையகப்படுத்தப்பட்ட சொத்தை மாவட்ட நிர்வாகம் மட்டுமே விற்கலாம்.

14. பொது அதிகார முகவர் சொத்தை விற்க வந்தால் அதிகாரம் இன்னும் தொடர்கிறாதா என்று கவனிக்க வேண்டும்.

15. ஒரு சொத்தில் பல காலம் குத்தகைதாரக இருப்பவருக்கு சொத்தை அவரே வாங்கி கொள்ள உரிமை இருக்கிறது. குத்தகையில் இருந்த சொத்தை விற்கும் போது குத்தகைதாரர் ஒப்புதல் வேண்டும்.

16. தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம், தாட்கோ, சிப்காட், டிட்கோ போன்ற அரசு நிறுவனங்கள் சொத்துக்களை விற்கும் பொழுது அவற்றை விற்பனை செய்ய அந்த அதிகாரிகள் உரிமை பெற்றி இருக்கிறாரா என்றுநேரடியாக சென்று விசாரிக்க வேண்டும்.

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#bying #asset #நீதிமன்றம்  #தாட்கோ #சிப்காட் #டிட்கோ #வாரிசு #cutodian #insolvent #assignee #இஸ்லாமியம் #அறக்கட்டளை #adverse #possession #liqidator #கம்பெனி #partner #share #holder

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்