கிரைய ஒப்பந்தத்தைப் பற்றி கவனம் செலுத்த வேண்டிய11 விஷயங்கள்

Image may contain: one or more people

1. இரண்டு நபர்களுக்கு இடையே ஒரு பொருள் விற்பனை செய்யும் போதோ, வாடகை பெறும் போதோ, சேவை பெறும் போதோ, அதில் உள்ள கண்டிசன்களுக்கு சாட்சிகள் முன்னிலையில் ஒத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் ஒப்புதல் அளித்து எழுதிக் கொள்ளும் பத்திரம் ஒப்பந்தப் பத்திரம் ஆகும்.

2. கிரைய ஒப்பந்த பத்திரம், வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம் , வீடு கட்டும் ஒப்பந்தப் பத்திரம், வியாபர ஒப்பந்தப் பத்திரம் என பல வகை இருக்கிறது.

3. மனை, பிளாட் வாங்கும் போது, ப்ரோமோட்டர், அல்லது பில்டர் பெரும்பாலும் அவர்களின் லெட்டர் பேடில் அக்ரீமென்ட் எழுதினால் செல்லாது, கண்டிப்பாக ரூ.2௦க்காவது முத்திரைத்தாளில் ஒப்பந்தம் போட்டு இருக்க வேண்டும்.

4. நில கிரைய ஒப்பந்தங்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லி விட்டது. வெறுமனே பதிவு செய்யாமல் போகும் அக்ரீமெண்டுகள் சிக்கல் வந்தால் நீதிமன்ற படியேறி நியாயம் பெற முடியாது.

5. கிரைய ஒப்பந்தம் போட்டுவிட்டு அதை பதிவும் செய்துவிட்டு 3 ஆண்டுகள் வரை கிரயம் செய்யப்படவில்லை என்றால் அந்த கிரைய ஒப்பந்தம் தானாகவே காலாவதி ஆகிவிடும்.

6. கிரைய பத்திரம் பெரும்பாலும் சொத்து வாங்குபவர் தான் தயார் செய்ய வேண்டும். விழிப்பாக எழுதப்பட வேண்டும்.

7. அக்ரிமெண்ட் போடும்போது வாங்கும் தகுதி உள்ளவரா என்று தீர ஆராய்ந்து அக்ரிமெண்ட் போட வேண்டும். இல்லை என்றால் கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு இழுத்து விடுவார்கள் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

8. வாங்குபவருக்கோ அல்லது அவர் குறிப்பிடும் மற்றவருக்கோ சொத்தை விற்க அனுமதிக்கலாம் என்ற விவரங்கள் அக்ரிமெண்ட்டில் எழுதினால் மட்டுமே பிறருக்கு கைமாற்ற வாங்குபவருக்கு உரிமை இருக்கிறது.

9. சொத்தை, விற்பவர், சொத்தை வாங்குபவர் பற்றிய முழு தகவல்களும் ஒப்பந்தத்தில் இருக்க வேண்டும்.

10. சொத்தில் எந்த வில்லங்களும் இல்லை என்பதை அக்ரீமெண்ட்டில் உறுதி செய்ய வேண்டும். அப்படி ஏதாவது வில்லங்கம் இருந்தால் அதனை அக்ரீமெண்ட்டில் குறிப்பிடுவது நல்லது.

11. கிரைய சொத்திற்கு மதிப்பிட்டு இருக்கும், தொகை எண்னாலும், எழுத்தாலும் எழுதப்பட்டு இருக்க வேண்டும். இருவரும் அந்த தொகைக்கு முழு சம்மதம் தெரிவித்து இருக்க வேண்டும்.

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#kirayam #bond #agreement #deed #land #realestate

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்