உங்கள் 30வயதுகளில் குபேரனாகும் வழிகள்! (தொடர்1)

dfd78d0b19dc2ce9134c3a0eb0ddcd50
வசதி படைத்தவர்கள் சொத்துக்களையே வாங்குகிறார்கள்
ஏழைகள் செலவையே வாங்குகிறார்கள்.

ஆனால் நடுத்தர மக்களோ சொத்துக்கள் என்றெண்ணி
செலவுகளையே வாங்கிறார்கள்!

இது இராபர்ட் கியோசகி அவர்களின் அறிவார்ந்த மொழி, கடந்த 15 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழிலில் பல வரவு செலவுகளை பார்த்து விட்டு வெற்றி பெற்ற முதலீட்டாளர்கள், தோல்வி கண்ட முதலீட்டார்கள் என
அனைத்தையும் கண்ட பிறகும், நான் பல இடங்களில் சறுக்கியது, தோல்விகள், வலிகள் என பார்த்த பிறகு எப்படி ரியல் எஸ்டேட் முதலீடு செய்யகூடாது என்று புரிந்து கொண்டுள்ளேன்.

கல்வி விலை குறைவானது, ஆனால் அனுபவம் அதிக விலையுள்ளது.
ஆம் என்னுடைய அனுபவங்கள் பல இலட்சங்கள் கொட்டி, நான் பெற்று கொண்டது, மேற்படி அனுபவங்களை தற்போதைய மில்லினியம் தலைமுறைகள் 21 வயதில் ரியல்எஸ்டேட் முதலீடுகளை தொடங்கினால் அவர்களை 30 வது வயதில் அவர்ளை குபேரனாக்க என்னால் வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் நிச்சயமாக செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

வாங்கிய நிலங்கள் விலை ஏறாமல் அப்படியே நிற்கின்றன. போட்ட பணங்களை திரும்ப எடுக்க முடியாமல் தவிக்கும் சிறு முதலீட்டாளர்கள் & நடுத்தர மக்கள், சேமிப்பவர்கள் இழப்பாளர்களாகவே ஆகின்ற வேதனை, இவை எல்லாம் ஏன்? என ஆய்ந்த போதுதான் என்னை போன்ற ரியல் எஸ்டேட் ஏஜென்டுகளும், சிறு முதலீட்டாளர்களும் பொறியில் சிக்கி இருக்கிறோம். என்று தெரிந்தது.

தொலைக்காட்சி, ரேடியோக்கள், பத்திரிக்கைகள் என அனைத்து ஊடகங்களும் ஊடகங்களால் முன்னிறுத்தப்படும். ரியல் எஸ்டேட் ஆய்வாளர்களும், அறிஞர்களும் பொய்களை சொல்லியே மக்களை ஏழைகள் ஆக்கி கொண்டு இருப்பதை காண்கிறேன்.

இப்பொழுதும் தனியார் வீட்டு வசதி கடன் நிறுவனத்துக்காக கோடிஸ்வர ஷாருக்கான், ஒரு நடுத்தர மக்களை போல பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, வீடு சொந்தமாகுதுன்னா EMI நமக்கு சுமையில்லை, வாடகையை விட EMI சிறந்தது என்று நடுத்தர மக்களை மூளை சலவை செய்யும் விளம்பரம் ஊடகங்களின் வந்து கொண்டு இருப்பதை பார்க்கும் பொழுது பல அப்பாவி நடுத்தர மக்கள் அந்த பெரிய புதைகுழியில் மாட்டி கொள்கின்றனர்.

இன்னும் பல ரிட்டயர்மெண்ட் பிளான்கள், லைப் இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ் கனவுவீடு போன்ற பெரிய பொறிகளில் மாட்டி பல நடுத்தர மக்களை அல்லல் பட்டு கொண்டு இருக்கின்றனர்.

நடுத்தர மக்கள் எப்பொழுதும் பாதுகாப்பான வருமானம், பாதுகாப்பான வாழ்க்கை என்று பாதுகாப்பு உணர்விலேயே கழிக்கின்றனர். அதனை நன்றாக இந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பாதுகாப்பற்ற தன்மையில் பாதுகாப்பும், பாதுக்காப்பு சொல்லப்படுவதில் பாதுகாப்பின்மையும் தற்போது நிலவுவரை சற்றும் ஆராயாமல் நடுத்தர மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஏழைகளுக்கு என்றும் பிரச்சனை இல்லை, இருக்கின்ற இடம், சாப்பிடுகின்ற சாப்பாடு என எதிலும் கவுரவம் பார்ப்பதில்லை. அன்று அன்று வேலை செய்து அன்று சாப்பிடுகின்றனர். சொத்தில்லை ,வரிசுமை இல்லை, முதலீடு இல்லை, சேமிப்பு இல்லை .

இந்த வசதி படைத்தவர்களுக்கும் எவ்வித கவலையும் இல்லை அறிவார்ந்து யோசித்து திட்டமிடடு பல பக்கங்களில் இருந்து CASHFLOW வை உருவாக்கி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.மிக குறைவான வரிகள், அதிக மூதலீடுள், அதனுடைய பலனை மீண்டும் மீண்டும் முதலீட்டிலேயே மறு முதலீடு செய்து கொண்டு இருக்கின்றனர். அதனால் இவர்களுக்கும் எவ்வித பிரச்சனை இல்லை.

ஆனால் இந்த நடுத்தர மக்கள், வசதி, படைத்தவர்களை பார்த்தும், நடுத்தர மக்களின் சுற்றங்களை பார்த்தும், தனது பொருளாதார மேன்மையை நிலை நிறுத்த தவியாய் தவிக்கின்றனர். இவர்கள்தான் வீடு, செட்டில் ஆவது செக்யூரிட்டி, ரிட்டியர் மெண்ட் பிளான,வீடு் என்று பெரிய வலையில் சிக்கிக்கொண்டு கெண்டை மீன்போல் மாட்டி கொண்டு அவதி படுகின்றனர். இந்த நடுத்தர மக்களின் மனநிலையை நம்பித்தான் இங்கு பல பன்னாட்டு நிறுவனங்கள் கடைகளை விரித்துள்ளனர் .

நான் நடுத்தர மக்களிடையே பிறக்கவில்லை. மிகவும் அடித்தட்டில் இருக்கின்ற மக்கள் குழுவில் பிறந்தேன். வளர்ந்தேன், நடுத்தர மக்கள் மேல்தட்டு மக்களிடையே கலந்து பழகி இருக்கிறேன் .அவர்களை புரிந்துகொண்டு இருக்கிறேன்.என்னுடைய முடிவு என்ன வென்றால் மூன்று தரப்பு மக்களிடையே நடுத்தர மக்களே அதிக பரிதாபத்திற்கு உரியவர்கள்.

சரி கடை & நடுத்தர மக்கள்:
முன்னேற வேண்டும் வசதி ஆனவர்கள் ஆக வேண்டும் என்று நினைத்தால் யாரும் யாருக்கும் தடையில்லை, வர்க்க, வர்ண பேதங்கள் முன்னேறுபவனை தடுக்காது, பிறருக்கு கொடுக்கும் மனநிலையில் (Giving Mindset) உங்கள் வாழ்க்கை அமைத்து கொண்டால்எல்லா வர்க்கமும், எல்லா வர்ணமும் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவியை தான் செய்கிறது.

முன்னேறுவதும், பணம் சம்பாதிப்பதும், சொத்துக்களை சேர்ப்பதும், மிகவும் எளிமையானது தான், உங்களுடைய கடந்த கால வாழ்க்கை , கடந்த கால தவறுகள் எதுவும் உங்களுடைய எதிர்காலத்தை பாதிக்காது என்று நான் நம்புகிறேன்.

ஆன்மீகம் கர்மா இறைவன் ஜாதகம் துணையில் முன்னேறலாம் என்று நினைப்பவர்கள் வலிமையான எண்ணங்கள் இல்லாத மன பலவீனமானவர்கள் அல்லது அத்தகைய பலவீனமானவர்களை வைத்து சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள் என நான் நம்புகிறேன்.

எனவே அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களிலிருந்து வரும் தற்போதைய 21 வயது இளைஞர்கள் தங்கள் கண்ணோட்டத்தை பற்றியும், பொருளாதாரத்தை பற்றிய பார்வையும் மாற்றி கொண்டால் நிச்சயம் 3௦ வயதுக்குள் குபேரானாக்க முடியும்.
நம் கண்ணோட்டம்தான் நம் வாழ்க்கை! (தொடரும்)

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#சம்யிக் #தர்ஷுன் #comfort #zone #focus  #குபேரர் #passive #income  #நூலகம்  #active-income #காஃப் #மேயார் #library #get

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்