தமிழகம் முழுவதும் புதிதாக நிலவரி திட்ட சர்வே செய்தால் மக்களுக்கு ஏற்படுகின்ற 12 நன்மைகள்…………..

404ae42a92b73ee25e158a73941492dc


1. இப்போதைக்கு இருக்கும் நவீன தொழில் நுட்பங்கள், சாட்டிலைட் உதவிகள் மூலம் நிலவரிதிட்ட சர்வே செய்வதால் மிகவும் துல்லியமான அளவுகளாக நிலங்கள் இருக்கும். பழைய நிலவரிதிட்டசர்வேயில் ஏக்கருக்கு 5 சென்ட் கூட குறைய இருக்கும் என்ற நிலையில் புதிய சர்வே ஏக்கருக்கு 1செண்ட்டுக்கு கீழே தான். சர்வே பிழை இருக்கும் இதனால் சில நூறு ஏக்கர் நிலங்கள் மிச்சமாகும்.

2. புதிய கிராம படங்கள், புதிய புல வரைபடங்கள், துல்லியமாக உருவாக்கப்படுவதால், பத்திரபதிவு துறை, அங்கீகார துறை ஆன்லைன் ஆகி கொண்டு இருப்பதால் புதிய குழப்பங்கள் வராமல் சீராக ஆன்லைன் மூலம் அரசு எந்திரம் வேகமாக செயல்பட ஆரம்பிக்கும்.

3. வருவாய் துறையின் குளறுபடிகளால் பொதுமக்கள் அடையும் பாதிப்புகள் 95% குறைந்து விடும். தற்போதைய நில உரிமையாளர்கள் யார்? பட்டா பெயர் மாறுதல், தவறுதல்கள், திருத்தங்கள் களையப்பட்ட்டு விடும். இதனால் ஏற்கனவே UDR திருத்தம், பட்டா திருத்ததிற்கு அளிக்கப்பட்ட மனுக்கள் தீர்வை நோக்கி நகரும்.

4. அரசின் நிதி உதவிகள், மானியங்கள், சரியான நபருக்கு கிடைக்கும்.சர்வே சம்பந்தபட்டவேலிதகறாருக்கான களப்பணி எளிமையாகி விடும் என்பதால், பெரிய அளவில் மக்களுக்கும் அரசு அலுவலகத்திற்கும் அலைச்சலும், காலதாமதங்களும் இருக்காது.

5. குறைகள் களையப்பட்ட புதிய சர்வே ஆன்லைன் இல் ஏறற்படும்போது மக்கள் அனைவரும் தங்களுடைய பட்டா பெயர் மாற்ற கோரிக்கைகளை இணைய மூலமே மனு செய்து சீக்கரமே இணைய வழியே பட்டா பெயர்மாற்றங்கள் பெற்றுகொள்ளும் சூழல் உருவாகிவிடும்.CORE BANKING போல எங்க வேண்டுமானலும் இருந்து கொண்டு பட்டா பெயர் மாற்றங்கள் செய்யகூடிய வாய்ப்புகள் உருவாகும்.

6. இதனால் பல கோடி ரூபாய்கள், லஞ்சங்கள், கையூட்டுளாக செலவழிப்பது போன்ற மக்கள் பணம் மிச்சமாகும்.

7. சொந்த நிலங்களை விட்டு விட்டு வெளிநாடுகளில், வெளியூர்களில் இருப்பவர்கள் தங்களுடைய ஆவணங்களை இணையத்தில் பார்த்துவிடுவதால் ஆவண மாறுதல்களை அடிக்கடி பார்வையிட்டு தவறுகள் நடந்தால் உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பார்கள்.இதனால் NRI சொத்துகளின் ஆவணங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

8. புதிதாக நிலவரி திட்ட சர்வே செய்யுபோது, வழக்குகள், பிரச்சனைகள், அரசு விதிகளுக்கு உட்படாத நிலங்களை தற்காலிகமாக LOCK (லாக்) செய்து விட்டு, நன்முறையில் இருக்கின்ற நிலங்களை சர்வே செய்து புதிய எண்களை கொடுத்துவிட்டால் உண்மையாகவே தமிழகத்தில் தூய்மையான நிலங்கள் எத்தனை சதவீதம் என்று தெரிந்து விடும்.

9. லாக் செய்யப்பட்ட சர்வேகளில் உள்ள அரசு விதி மீறல்கள் போலி ஆவணங்கள், நில மோசடிகள் RDO நீதிமன்றத்தில் தீவிர விசாரணை நடத்தி உண்மை உரிமையாளர்களை ஆவணப்படுத்தலாம்.புதிய சர்வே கு பிறகு போலி நில ஆவங்கள் மோசடியில் பெருமளவு குறையும்.

10. தொழில் செய்யும் நிறுவனங்கள் வியாபார நிறுவனங்கள், தனவந்தர்கள் பெரிய அளவில் நிலங்கள் வாங்கும் போழுது லாக் செய்யப்பட்டு இருக்கும் நிலங்களை தவிர்த்து பிற நிலங்களை வாங்க விரும்புவர்.

11. பழைய சர்வே செய்யும்போது DC நிலங்கள், பஞ்சம நிலங்கள் பூதான நிலங்கள் பற்றிய போதிய விழிப்புணர்வும் அறிவும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே போதுமானதாக இல்லை. 5 சென்ட் வீட்டுமனையை அளந்தாலும் நிலத்தை சுற்றி உள்ளவர்களின் அனைவரையும் நிற்க வைத்து அவர்கள் முன்தான் சர்வே செய்து ஆவணங்களில் குறிப்பிடுவர். ஆனால்1985 ல் தமிழகம் முழுக்க சர்வே செய்த போது ஒடுக்கப்பட்ட, பழங்குடி மக்களின் நிலங்களை அவர்களின் கருத்தை பெறாமல் UDRல் பொதுநிலங்களாக வகைப்படுத்தி பதிவு செய்துவிட்டு விட்டனர். எனவே இப்பொழுது அனைத்து மக்களையும் உள்ளடக்கி நிலங்களை மீண்டும் சர்வே செய்யும் போது நிலத்திற்கும் சமூக நீதி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும்.

12. புதிதாக சர்வே செய்யும் போதே அங்கீகார துறையுடன் ஒருங்கிணைந்து தமிழகம் முழுதிற்குமான மாஸ்டர் பிளான் தயாரிக்கலாம். எது கீரின் ZONE, எது பிளான் ZONE, yellow ZONE தாம் பிரிக்கலாம். பதிவு துறையும் களநிலத்திற்கு ஏற்றவாறு வழிக்காட்டி மதிப்புகளை சர்வே செய்யும் நிலங்களுக்கு வைக்கலாம்.
குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#tamilnadu #land #நிலவரிதிட்டம் #சர்வே  #நஞ்சை #புஞ்சை #மானவாரி #வருவாய்துறை #ஆன்லைன்  #போலி #பத்திரம் #udr #fmb #village #map #document #revenue #survey #online #fake #deed

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்