வெற்றிகரமான முகவர்களாவது எப்படி ?….. (தொடர் -2)

பேச்சாற்றல் வளர்ப்போம் :
c3161cf52ab8b59548628d2484e83dc4
படிப்படியாக மேடையேறுவது எப்படி?

1. உங்களைப் பற்றி பெருமிதமாகவும் அதே நேரத்தில் தன்னடக்கமாகவும் பேசுங்கள்,

2. உங்களுக்குப் பிடித்த கோட்பாடுகளை, பாடல் வரிகளை முதலில் ஒத்திகை பார்த்தபின் கூட்டங்களில் முழங்குங்கள்,

3. எழுதித் தயாரிக்கப்பட்ட அறிக்கையைக் கூட்டங்களில் வாசியுங்கள். வரவேற்புரை வழங்கப் பழகுங்கள்,

4. பேச்சாளரை அறிமுகப்படுத்திப் பேசுங்கள் ,

5. நன்றியுரை சொல்லுங்கள்,

6. பாராட்டுக் கூட்டங்களில் பாராட்டிப் பேசுங்கள்,

7. உங்களுக்குப் பிடித்த தலைப்புகளில் சிறிது நேரம் பேசுங்கள்,

8. நீங்கள் அறிந்த, மற்றவர்கள் அறிந்திராத விசயத்தை வற்புறுத்தி எடுத்துச் சொல்லி புரியவையுங்கள்,

10. நல்ல தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் பேசுங்கள்,

பத்து நிமிடங்களில் ஒரு சிறிய பேச்சுக்கான குறிப்பை தயார் செய்வது எப்படி?

1. பேச வேண்டிய தலைப்பைப் பற்றி முதலில் நன்கு புரிந்து கொள்ளுங்கள்,

2. பேச்சின் முடிவில் எந்தக் கருத்தைக் கூட்டத்தினர் மனதில் பதியும்படியாக சொல்ல விரும்புகிறீர்களோ அதை எழுதிக்கொள்ளுங்கள்,

3. கூட்டத்தினர் ஆர்வத்தைத் தூண்டி கவனத்தைக் கவரும் வண்ணம் அமைய வேண்டிய பேச்சின் துவக்கப் பகுதியை எழுதிக் கொள்ளுங்கள்,

4. இரண்டு அல்லது மூன்று முக்கிய கருத்துகளை எழுதிக்கொள்ளுங்கள்,

5. இக்கருத்துக்களுக்குப் பொருந்தும் சொல் நயங்கள், மேற்கோள்கள், துணுக்குகள், நகைச்சுவை ஆகியவற்றை எழுதிக் கொள்ளுங்கள்,

6. பேச்சின் துவக்கத்திலிருந்து முடியும் வரை உள்ள மேற்கண்ட விசயங்களை இப்போது பொருத்தமான முறையில் இணைத்துக் கொள்ளுங்கள். இணைப்புச் சொற்கள், சொற்றொடர்கள் ஆகிறவற்றை எழுதிக் கொள்ளுங்கள்,

7. இந்த முறைப்படி எளிதில், துரிதமாக ஒரு பேச்சைத் தயாரிக்கலாம்.
பேசுவதற்காக:

நிறையப் படியுங்கள். நன்றாக சிந்தியுங்கள், அன்றாட நிகழ்ச்சிகளையும், நம்மைச்சுற்றி உள்ள பல விசயங்களையும் உற்று நோக்குங்கள். பல விசயங்களை அறிந்து கொள்ளும் வண்ணம் திறந்த மனத்தவராக இருங்கள். முழுப்பேச்சையும் எழுதுங்கள். கருத்துக்களை மனப்பாடம் செய்யுங்கள். வாக்கியங்களை ஒன்றுவிடாமல் மனப்பாடம் செய்யாதீர்கள்.

பேச்சின் குறிப்புகளை அஞ்சல் அட்டை வடிவிலான சிறிய அட்டைகளில் குறித்து வையுங்கள். பேசும் முன் உடலும், உள்ளமும் சமநிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பேசும் முன் சிறந்த பேச்சாளர்களை எண்ணிப் பாருங்கள்.

அவர்கள் பேச்சுக்களை நினைவு கூறுங்கள். அவர்களும் ஆரம்ப காலத்தில் உங்களைப் போன்ற சாதாரண பேச்சாளர்கள் தான் என்பதையும் நினைவு கூறுங்கள். உங்களால் முயன்ற அளவு நன்றாகப் பேசுங்கள். உங்கள் எண்ணங்கள் சிறப்பாக வெளிப்பட வாழ்த்துங்கள்.

பேச்சுக்கலை குறிப்புகள்:
1. எப்போதும் ஏதாவது பற்றிச் சிறிதளவேனும் பேச முடியும் என்ற அளவிற்கு மனதில் கருத்துக்களைச் சேகரித்து வையுங்கள். இப்பழக்கம் வளர வளர நம்மால் எப்போதும் பேசுவதற்குத் தயாராக இருக்க முடியும்,

2. பேச முற்படும் போது என்ன பேசப்போகிறோம் என்பதைத் தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள். கருத்துச் செறிவிற்கு இதுவே அடிப்படை,

3. சொல்ல விரும்பும் கருத்துக்களை வரிசைக் கிரமமாக மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். கருத்துக்களை வரிசைப்படுத்தினால் தான் பேச்சு வகைப்படும்,

4. எப்போது பேசினாலும், எங்கு பேசினாலும், என்ன பேசினாலும் பேச்சில் தெளிவு இருக்க வேண்டும் என்பதை நினைவிற் கொள்ளுங்கள். எளிய சொற்கள் சிறிய சொற்றொடர்கள். பொருத்தமான சொல் நயங்கள் பேச்சின் மூலங்கள் நடைபெறுகின்றது.

தோல்விகள் ஏன் ஏற்படுகின்றன?…..

1.அனுபவமும், அறிவும் போதிய அளவுக்கு இல்லாமை,

2.ஒரே நாளில் எல்லாம் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு,

3.ஒரே முறையில் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை,

4.ஆழம் தெரியாமல் காலை விடுவது,

5.இடைவெளி விட்டு செய்ய வேண்டியதை இடைவெளி விடாமல் அவசர அவசரமாகச் செய்வதன் விளைவு,

6.முதலீடு இல்லாமல் அகலக்கால் வைப்பது,

7.எதிர்வரும் சிக்கல்கள் பற்றி திட்டமிடாதது,

8.அணுகுமுறையில் இதமாக இல்லாமை,

9.சில சமயங்களில் சூழ்நிலைக்கேற்ப இசைந்து போகும் இயல்பு இல்லாமை,

10.உண்மையாக உழைக்காமல் இலாபத்திலேயே கண்ணாக இருப்பது,

11. கோபம், வெறுப்பு மற்றும் இங்கிதம் தெரியாமல் பேசுதல்,


12.வருமுன் காக்கும் உணர்வை வளர்த்துக் கொள்ளமை,

13.இயல்பு நிலையை உணராமல் ஏட்டுச் சுரைக்காயை நம்புவது,

14.விதண்டாவாதங்களைப் பேசி சுற்றி உள்ளவர்களின் எதிர்ப்பினைச் சம்பாதித்துக் கொள்வது.

மனித உறவுகள் மேம்பட:-
குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல்

 இருக்கவும் இதோ சில எளிய வழிகள் :
1. தானே பெரியவன், தானே சிறந்தவன் என்ற அகந்தையை (Ego) விடுங்கள்,

2. அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை விடுங்கள் (Loose Talks)

3. எந்த விசயத்தையும் பிரச்சினையையும் நாசூக்காகக் கையாளுங்கள் (Diplomacy).

4. விட்டுக்கொடுங்கள். (Compremise)

5. சில நேரங்களில் சில சில சங்கடங்கள் சகித்துதான் ஆக வேண்டும் என்று உணருங்கள். (Tolerance)

6. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று கடைசி வரை வாதாடாதீர்கள். (Adamant Argument)

7. குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள் (Narrow Mindedness)

8. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். (Carrying Tales) ,

9. மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள் (Superiority Complex),

10. அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள் (Over Expectations)

11. எல்லோரிடத்திலும் எல்லா விசயத்திலும் அவர்களுக்கு சம்பந்தம்
உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்,

12. கேள்விப்படுகிற எல்லா விசயங்களையும் நம்பிவிடாதீர்கள்,

13. அற்ப விசயங்களையும் பெரிதுப்படுத்தாதீர்கள்,

14. உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள் (Flexibility),

15. மற்றவர் கருத்துக்களை, செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள், (Misunderstanding)

16. மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள். (Courtesy),

17. புன்முறுவல் காட்டவும், சிற் சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

18. பேச்சிலும், நடத்தையிலும், திமிர்தனத்தையும், தேவையில்லா மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும், பண்பாட்டையும் காட்டுங்கள்.

19. அவ்வப்போது நேரில் சந்தித்து, மனம் திறந்து அளவளாவுங்கள் (Frankness)

20. பிணக்கு ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல், நீங்கள் பேச்சை துவங்க முன்வாருங்கள், (Initiative)

21. தேவையான இடங்களில் நன்றியையும், பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள், பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை, அதுவே உங்களுக்கு வெற்றியாக அமையும்.

உடல்மொழி:-
1.நாம் மற்றவரிடம் பேசுவதற்கு முன்பே நம் கண், கை அசைவுகள், அமரும் விதம் போன்றவை நம்மைப் பற்றி அவரிடம் வெளிப்படுத்துகின்றன. இதற்கு பாடிலாங்குவேஜ் என்று பெயர்,

2.மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டுகிறது,

3.மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராக காட்டும்,

4.மிக தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்தி பேசாதீர்கள்,

5.நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்,

6.நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேறி என நினைக்கக்கூடும்,

7.பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப்படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்,

8.நகத்தையோ, பென்சில் / பேனா முனை
யையோ கடிப்பதை தவிர்க்கவும்.அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்,

9.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்,

10.குழந்தைகளோடு பேசும்போது அருகில், அமர்ந்து பரிவோடு பேசவும்,

11.சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.
குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற ரியல் எஸ்டேட் சூப்பர் ஸ்டார் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் பிராப்தம் ரியல் எஸ்டேட் கிளினிக் நெ.14, வெங்கடேஸ்வரா நகர், அறிஞர் அண்ணா பஸ்டாண்டு, மதுராந்தகம் -603306. ஆலோசனை நேரம் திங்கள் முதல் சனி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை. அணுகலாம். தொடர்புக்கு : நீலவேணி 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#Diplomacy #Compremise #Tolerance #Adamant #Argument #Narrow #Mindedness  #Frankness #Misunderstanding #அஞ்சல் #முகவர் #Carrying #Tales

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்