மீண்டும் கிளம்பும் நில உச்சவரம்பு சட்டம் ! முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய 18 செய்திகள்

1. நில உச்சவரம்பு சட்டம் 1961 என்பது நிலகிழார் குடும்பங்கள் , ஜமீன்கள், நிறுவனங்கள், பொது அறக்கட்டளைகள், தனியார் அறககட்டளைகள், சொசைட்டி, நிறுவனங்கள் ஆகியோர் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சொத்துக்கள் வைத்து இருக்க கூடாது என்று , வரம்புபடுத்தி மிகை & உபரி நிலங்களை கையகபடுத்த நிலமற்ற ஏழை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், என்ற உயரிய நோக்கிலும் ஒரே இடத்தில் நிலம் குவிவதை தடுக்கவும் நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.

67b0107eea203787995c2646cb4ce2ae

2. 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு அதிகபட்சம் 15 தர ஏக்கர் நிலமும் அதற்கு மேல் இருக்கும் ஒவ்வொரு குடும்ப நபருக்கு தலா 5 தர ஏக்கரும் , சீதன சொத்தாக மருமகளுக்கு 10 தர ஏக்கரும், வைத்து இருக்கலாம். மேலும் இவையெல்லாம் உள்ளடக்கி 1 குடும்பத்துக்கு 30 தர ஏக்கர் வரை அவர்கள் நிலத்தை வைத்து இருக்கலாம் என்று சட்டம் முதலில் இயற்றப்பட்டது.

3. ஏக்கர் என்பது பிரிட்டிஸ் அளவுமுறை , ஆனால் தர (STANDRAD ACRE) ஏக்கர் என்பது எந்த அளவீடு முறையின் அளவு என எனக்கு புரிபடவில்லை . தர ஏக்கர் என்பது சாதாரண ஏக்கரை விட கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். ஆனால் அவை நிலத்தின் தீர்வை அடிப்படையில் தர ஏக்கர் கணக்கிடபடுகிறது என்று சொல்கிறார்கள்.

4. நான் கண்டவரை 1தர ஏக்கர் சாதாரண ஏக்கரை விட கூடுதலாக தான் இருக்கிறதே தவிர குறைவாக இல்லை. இன்றைய நிலவரப்படி 15 தர ஏக்கர் என்பது புன்செய்யாக இருப்பின் 40 சாதாரண ஏக்கரும் நன்செய்யாக இருப்பின் 25 சாதாரண ஏக்கரும் , மானாவாரியாக இருந்தால் புன்செய் விட இன்னும் அதிகமாகவும் இருக்கும் இவையெல்லாம் விவசாய ஆதாரத்தின் வருமான அடிப்படையில் நில தீர்வையின் அடிப்படையில் வகைபடுத்தப்படுகிறது.

5. 40 சாதாரண ஏக்கர் , 25சாதாரண ஏக்கர் அதிகபட்சம் உச்சவரம்பு என்பதே கடைநில மனிதனுக்கு அபரிதமே. மேற்படி நிலங்களை வைத்து ஜமீன்கள், நிலகிழார்கள் நல்வாழ்வு வாழலாம். ஆனால் நிலவரம்பு உச்ச சட்டம் வந்து நாங்கள் வீழ்ந்துவிட்டோம் என்று சொல்கிறார்கள் , எப்படி என்று தான் தெரியவில்லை.

6. மடம், ஆதீனம் போன்ற சமய பொறுப்பு அமைப்புகள் , தோட்டபயிர் பிரிவு , பல்கலைகழகங்கள் , பழதோட்டங்கள் , தோப்புகள், கரும்பு ஆலைகள், கால்நடை வளர்ப்பு பண்ணைகள், & பால் பண்ணைகள், அரசின் அனுமதியுடன் இயங்கும் தனியார் & அரசு கம்பனிகளுக்கு நில உச்சவரம்பு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது (ஏன்னு கேட்காதிங்க! கேட்டா நான் பொங்கிடுவேன்).

7. உச்சவரம்பு சட்டம் 1961 இல் போட்டார்களே தவிர பெரும் அளவில் நிலம் கையக படுத்துதல் நடக்கவே இல்லை! எல்லா பண்ணையார்களும் ஜமீன்களுமே ! அரசு எந்திரத்தை கைப்பற்றி கொண்டு இருந்ததால் என்று ஊகிக்கலாம்.

8.ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் வரும் நில கிழார்கள் , தமிழகம் முழுவதும் இருந்த 74 ஜமீன்தார்கள் மேற்படி காலகட்டத்தில் அபரிதமான சொத்துக்களை காப்பாற்ற கரும்பாலை –சர்க்கரை ஆலை தொடங்குவது , பல்கலை கழகங்கள் தொடங்குவது , அறக்கட்டளைகள், கல்விக்கூடங்கள் திறப்பது என தமிழக மக்களுக்கு பயன்படும்படியான காரியங்களை செய்து சொத்துக்களை காப்பாற்றி கொண்டனர் .

9. 1970 ல் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் நில உச்சவரம்பு சட்டம் நிர்ணயிக்கப்பட்ட 30 தர ஏக்கரை குறைத்து 15 தர ஏக்கர் என்று குறைத்தார் . இதனால் மீண்டும் அதிக நிலம் வைத்து இருப்பவர்கள் கட்டுபடுத்த பட்டார்கள் மிக தீவிரமாக உச்சவரம்பு சட்டம் அமுல்படுத்தப்பட்டு 1983 ம் ஆண்டு வரை நிலங்கள் மிகுதி கையகபடுத்தபட்டது.

10. 1 லட்சத்து 11 ஆயிரம் ஏக்கர் உபரி நிலங்கள் , கண்டறியப்பட்டு 72 ஆயிரம் ஏக்கர் மட்டும் கையகபடுத்தபட்டது. மீதி 34 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இன்றும் நில உச்சவரம்பு சட்டத்திலே இருக்கிறது. இன்னும் மிகை நிலங்களை அரசு கைபற்றில் கொண்டு வரவில்லை .

11. கையகபடுத்தபட்ட 72ஆயிரம் ஏக்கர் நிலங்கள் , நிலமற்ற விவசாய மக்களுக்கு பிரித்து ஒப்படைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இந்த நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் , திருவண்ணாமலை மாவட்டங்களில் இந்த நிலங்களை மக்கள் “கலைஞர் பட்டா “என்றே அழைத்து கொண்டு இருப்பதை கேட்டு இருக்கிறேன் .

12. இன்றளவும் நில உச்சவரம்பு சட்டம் நடைமுறையில் இருந்தாலும் மக்களுக்கு அதை பற்றிய விழிப்புணர்வுகள் இல்லை! 1990 க்கு பிறகு நாடு உலகமயமாக்கல் செயல்பாடுகளில் மூழ்கி சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு நிலங்கள் எடுத்து கொடுக்க வேண்டிய நிலைமையில் , நில உச்சவரம்பு சட்டம் SEZ ல் மேலோங்காத நிலையிலே இருந்தன .

13. புதிதாக ஏக்கர் கணக்கில் இடம் வாங்க போவதாக இருந்தால் நாம் வாங்க போகும் நிலங்கள் அருகில் “கலைஞர் பட்டா” அல்லது இலவச ஒப்படை நிலங்கள் இருந்தால் , அந்தபகுதி நில உச்சவரம்பில் இருகின்றதா ? என்று சோதித்து கொண்டு சொத்தை வாங்குதல் நல்லது.

14. நில உச்சவரம்பு சட்டத்தில் கையகபடுத்தபட்ட நிலங்களுக்கு நஷ்ட ஈடு அரசால் வழங்கபடுகிறது அதில் முரண்பாடுகள் , சிக்கல்கள் இருந்தாலும் , உச்சவரம்பு சட்டத்தை அமுல்படுத்துவதில் நில உரிமையாளர்கள் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தினாலும் அதனை பற்றி விசாரிக்க , தீர்வுகள் கொடுக்க, நில தீர்ப்பாயம் ஒன்று (LAND TRIBUNAL) இந்த சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

15. இந்த சட்டத்திற்கு மாநில அளவில் நில ஆணையர் , வனத்துறை தலைவர், நில சீர்திருத்தங்கள் இயக்குனர், ஆகியோர் தலைமையில் தனிவாரியம் இயங்குகிறது.

16. மாவட்ட அளவில் மாவட்ட வருவாய் அலுவலரும், மேற்படி நில உச்சவரம்பை கவனித்து வந்தார். 2017 ம் ஆண்டு முதல் மேற்படி நில உச்சவரம்பு சட்ட நிலங்களை பராமரிக்க வருவாய் கோட்டாட்சியருக்கு பொறுப்பு ஒப்படைக்கபட்டுள்ளது.

17. இப்பொழுது மீண்டும் அரசு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் உள்ள கையகபடுத்தாத மிகை நிலங்களை குறித்த ஒரு தர பட்டியல் எடுத்து கொடுக்குமாறு ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரிடம் இருந்து கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு ஆணைகள் வந்து இருக்கிறது .

18. மீண்டும் கிளம்பும் இந்த உச்சவரம்பு சட்டத்தால் எடுக்கப்படும் மிகை நிலங்கள் யாருக்கு பயனளிக்கும் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#நில #உச்சவரம்பு #சட்டம் #ஜமீன் #வனத்துறை #கலைஞர் #பட்டா #சொசைட்டி #socity #law #jamin #kalaingar #deed #forests

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்