கற்கள் சொல்லும் கதைகள் !

ஒவ்வொரு நிலத்தையும் புல எண் வாரியாக பிரிப்பதற்கு ஒவ்வொரு புல எண்களின் எல்லையின் நான்கு மூலைகளிலும் அடையாளத்திற்காக நடப்பட்டு இருக்கும் கருகற்களே சர்வே கற்கள் ஆகும். இது ஒவ்வொரு புல எண்ணுக்கும் இருக்கும்.

ஒவ்வொரு நிலவகை ஆரம்பிக்கும் போது அதனை சர்வே கற்களை வைத்து அடையாளபடுத்தி இருப்பார்.
இரண்டு கிராம எல்லை , மூன்று கிராம எல்லை , நான்கு கிராம எல்லைகள் என அனைத்தையும் இந்த சர்வே கற்கள் வைத்து பிரித்து இருப்பார்கள்.
எப்பொழுதும் ஒரு இடத்தை பார்க்க போகிறீர்கள் என்றால் அந்த இடத்தை சுற்றி கால் கி.மீ சுற்றளவுக்கு நடந்து சென்று எப்பொழுதும் கள ஆய்வு செய்ய வேண்டும்.

ஒரே புல எண்ணில் இருக்கும். ஒரு இடத்திற்கும். மற்றொரு இடத்திற்கும், எல்லைகளாக பனைகுட்டிகள் , பனைமரங்கள், பாலை மரங்கள், வேப்ப மரங்கள், புங்க மரங்கள் போன்ற மரங்களை நட்டு வைத்து மேற்படி இரண்டு இடங்களை பிரித்து காட்டுவதற்கு எல்லைகளாக பிரித்து இருப்பார்.
சிலர் கருங்கற்களை காணி கல்லாக புதைத்து வைத்து இருப்பார். இவை அரசினுடைய சர்வே அல்ல ! அதை கள ஆய்வு செய்யும் போதே தெரிந்து கொள்ளலாம்.
இரு வேறு புல எண்கள் பிரியும் இடத்தில நட்டு வைத்து அடையாளமாகி நிற்கும். காணி கற்கள் சர்வே கற்கள் ஆகும். இது தோராயமாக 15CM க்கு 15CM சதுர வடிவமாக தலைபகுதியிலும் , செவ்வக கோளமாக இரண்டு அடி கல்லாக மண்ணில் புதைத்து இருக்கும். எந்த திசையில் புதிய புல எண் ஆரம்பிக்கிறதோ எந்த புல எண்களை நோக்கி சர்வே கல்லில் அம்புகுறி போடப்பட்டு இருக்கும்.

சர்வே கல்


அதுவே இரண்டு கிராமத்திற்கு இடையே இருக்கின்ற எல்லையில் முடியும்புல எண்ணில் இரண்டு படர்க்கையான கோடுகள் போட்டு அதன் நடுவில் சிறு புள்ளியை செதுக்கி வைத்து இருப்பார்கள்.
அதுவே மூன்று கிராமத்தை இணைக்கும் எண்ணாக இருந்தால் கல்லின் மேல் முக்கோணம் வரைந்து நடுவில் ஒரு புள்ளி செதுக்கப்பட்டு இருக்கும்.

நான்கு கிராமத்திற்கான எல்லை சர்வே கல்
நான்கு கிராமங்களாக இருந்தால் ஒரு சதுரம் செதுக்கப்பட்டு அதில் புள்ளி இருக்கும். சில இடங்களில் கூட்டல் குறி போடப்பட்டு இருக்கும். அதுவே நீர்நிலை புறம்போக்குஆரம்பிக்க போகிறது
என்றால் காணி கற்களின் தலையில் ஒரு வட்டம் போடப்பட்டு அதன் நடுவில் ஒரு புள்ளி செதுக்கப்பட்டு இருக்கும்.


நீர் நிலை எல்லை சர்வே கல்

மேற்படி இரண்டு , முக்கோணம், சதுரம், வடம், வரைந்த கற்கள் , 25CM , 2CM , சதுரமாகவும், 3அடிக்கு மேல் செவ்வக கோளமாகவும், மண்ணில் புதைந்து இருக்கும்.

இரண்டு கிராமத்திற்கான எல்லை சர்வே கல்








இது மட்டும் இல்லாமல் கற்களில் “R” என்று போட்டு இருந்தால் “RESERVE FOREST” என்று பொருள்.

வெள்ளைகார காலத்தில் புதைக்கப்பட்ட சர்வே கற்கள் எல்லாம் முரட்டு தனமாகவும், மிகவும் கனமாகவும், தாமாகவும், இருக்கிறது. தற்போது புதைக்கபடுகிற கற்கள் வெள்ளைகார கால கற்களை விட கொஞ்சம் மெலிந்து பலவீனமாகவும்தான் இருக்கிறது.

விளக்கிகள்:
1985 இல் ஒட்டு மொத்த கிராமத்தை சர்வே செய்து கிராமத்தை அளந்து யூடிஆர் பட்டா மக்களுக்கு வழங்கிய போது ஒட்டுமொத்த கிராமத்தின் வரைபடத்தை வரைந்து கிராமத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இருந்த ஆறு , ஏறி, குளம், குட்டை, நீரோடை, நடைவழி பாதை , மாட்டுவண்டி பாதை, கற்கள் இருக்கும் பகுதி, EB லைன் , கிணறு போன்ற இடங்களை வரைபடத்தில் விளக்கிகளால் அடையாளபடுத்தி இருந்தனர்.

இப்பொழுது நிலம் வாங்க போகிறீர்கள் என்றால் நிச்சயம் கிராம வரைபடத்தை பார்த்து அதில் உள்ள விளக்கிகள் (குறியீடை )பார்த்து அதில் 1985 சர்வேயின் போது என்ன இருந்தது. இப்பொழுது என்ன இருக்கிறது போன்ற ஒப்புமைகளை செய்து கொள்ள முடியும்.
அதன் மூலம் சில முடிவுகளை எடுக்க முடியும்.

அதன்படி சில விளக்கின் படங்களை கீழ்க்கண்டவற்றில் காட்டி இருக்கிறேன்.

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#சொத்துக்கள் #சேரட்டும்!! #ஐஸ்வர்யம் #பெருகட்டும்!!
#சர்வே #கற்கள் #புலம் #எண் #நீர் #நிலை #எல்லை #சதுரம் #முக்கோணம் #யூடிஆர் #பட்டா #புள்ளி #dot #stone #survey #number #border 

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்